
அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி இரு பெரிய இராணுவ தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.3.5 பில்லியன் டாலர்கள் அல்லது 25000 கோடி அளவில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இரஷ்யாவிடம் இருந்து ஆயுதக் கொள்முதலை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது.2007 முதலே கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்கள் பெற்றுள்ளது.தற்போது 24 எம்எச்-60 ரோமியோ பலபணி வானூர்திகள் 2.6 பில்லியன் டாலர்கள் செலவிலும்,இராணுவத்திற்காக 930 மில்லியன் டாலர் செலவில் ஆறு அப்பாச்சி வானூர்திகள் வாங்கவும் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி அடுத்த வாரம் அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் பெறுவதால் தவணையாக 15%ஐ முதலில் இந்தியா செலுத்தும்.அதன் பிறகு அடுத்த இரு வருடத்திற்குள் முதல் வானூர்திகள் இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கும் அமெரிக்கா.அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி நான்கு வருடத்திற்குள் மொத்த வானூர்தியும் டெலிவரி செய்யப்படும்.
ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட அப்பாச்சி வானூர்திகளோடு புதிய ஆறு வானூர்திகள் இராணுவத்திற்காக வாங்கப்படுகின்றன.ஸ்டிங்கர் வான்-வான் ஏவுகணைகள்,ஹெல்ஃபயர் வான்-தரை ஏவுகணைகள் ,துப்பாக்கிகள் மற்றும் இராக்கெட்டுகளுடன் இந்த அப்பாச்சிகள் டெலிவரி செய்யப்படும்.
அதே போல எம்எச்-60 வானூர்திகள் ஹெல்ஃபயர் ஏவுகணைகள், எம்கே54 டோர்பிடோக்கள்,துல்லியமாக தாக்கும் இராக்கெட்டுகள் ஆகியவற்றோடு டெலிவரி செய்யப்படும்.இந்த வானூர்திகள் முன்னனி போர்க்கப்பல்களுக்கு மிக அவசியம் ஆகும்.கப்பல்களுக்கு முன்பாகவே பறந்து நீர்மூழ்கியின் நடமாட்டத்தை அறியவும் தேவையெனில் தாக்கவும் இவை மிக அவசியம் ஆகும்.
தற்போது கடற்படையில் உள்ள அனைத்து முன்னனி போர்க்கப்பல்களுக்கும் பழைய 12 சீகிங் வானூர்திகளும்,பழைய பத்து காமோவ் வானூர்திகள் மட்டுமே உள்ளன.
இது தவிர மேலதிக தளவாட ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட உள்ளன எனினும் அவை தற்போதைக்கு கையெழுத்தாகாது.