உளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல்

  • Tamil Defense
  • February 26, 2020
  • Comments Off on உளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல்

வடகிழக்கு டெல்லியில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் கலவரக்காரர்கள் அங்கித் சர்மா (26) என்ற இன்டலிஜன்ஸ் பீரோ உளவுத்துறை அதிகாரியை அடித்து கொன்றுள்ளனர்.

சாக்கடை பகுதியில் தற்போது அந்த உளவுத்துறை அதிகாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்த் பக் பாலம் பகுதியில் அவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் கசூரி பகுதியில் அங்கித் சர்மா அவர்கள் வசித்து வந்துள்ளார்.செவ்வாய் மாலையன்று தனது பணி முடித்து அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவரை சூழ்ந்த சிலபேர் அவரை அடித்தே கொன்றுள்ளனர்.அதன் பிறகு அவரது உடலை சாக்கடை பகுதியில் வீசியுள்ளனர்.

கடந்த செவ்வாயில் இருந்து அவரை குடும்பத்தார் தேடியுள்ளனர்.அவரது அப்பாவின் ஐபியில் தான் பணிபுரிகிறார்.அவரது உடல் தற்போது ஜிடிபி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 2017ல் தான் அங்கித் அவர்கள் படையில் இணைந்துள்ளார்.அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.