ஐஓசி பெற்ற ஹாலின் புதிய வானூர்தி ; குறைந்த காலத்திலேயே சாதனை

  • Tamil Defense
  • February 8, 2020
  • Comments Off on ஐஓசி பெற்ற ஹாலின் புதிய வானூர்தி ; குறைந்த காலத்திலேயே சாதனை

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மேம்படுத்திய இலகுரக யுடிலிடி வானூர்தி தான் எல்யுஎச் எனப்படுகிறது.தற்போது அந்த வானூர்தி ஐஓசி எனப்படும் முதன்மை ஆபரேசன் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெற்றுள்ளது.அனைத்து சோதனைகளையும் முடித்த பிறகு தற்போது நடக்கும் இராணுவ கண்காட்சியில் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளது.

வானூர்தியின் கடற்சோதனைகள் சென்னையிலும்,அதன் பிறகு புதுச்சேரியில் 2019லிலும் நடைபெற்றது.எல்யுஎச் ஒற்றை என்ஜின் பெற்ற புதிய வானூர்தி ஆகும்.தற்போது படையில் செயல்பாட்டில் உள்ள பழைய சீட்டா மற்றும் செடக் வானூர்திகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளது.

ஹால் எல்யுஎச் முதல் வானூர்தி தனது முதல் பறப்பை 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி முடித்தது.இரண்டாவது வானூர்தி தனது முதல் பறப்பை மே 22 ,2017ல் முடித்தது.மூன்றாவது வானூர்தி டிசம்பர் 14 2018ல் முடித்தது.

ஐஓசி என்பது எந்த தயாரிப்புக்கும் ஒரு முக்கிய மேம்பாடு தொடர்பான சாதனை ஆகும்.