முதல் இரு மாற்றப்பட்ட அட்மிரல் கிரிகோரோவிச் வகை வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட பிரைகேட் கப்பல்களை 2024ன் முதல் பாதியில் தான் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்ய முடியும் இரஷ்யா கூறியுள்ளது.
கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள இந்த இரு கப்பல்களையும் வேலைப் பளு காரணமாக 2024ல் தான் டெலிவரி செய்ய முடியும் என இரஷ்யா கூறியுள்ளது.
கப்பல் ஏற்றுமதிக்கான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 2016ல் ஏற்படுத்தப்பட்டது.முதல் இரு கப்பல்கள் இரஷ்யாவின் யந்தர் தளத்தில் கட்டப்படும்.அடுத்த இரு கப்பல்கள் இரஷ்யாவின் யுனைடெட் கப்பல்கட்டும் நிறுவனத்துடன் இணைந்து கோவா கப்பல் கட்டும் தளம் இந்தியாவில் கப்பலை கட்டும்.
2.5 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த திட்டத்தில் நான்கு கப்பல்கள் கட்டப்படும்.தற்போது இந்த கப்பல்களை இந்தியாவில் கட்டுவதற்காக கோவா தளம் அப்கிரேடு செய்யப்பட்டு வருகிறது.மேலும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
நான்கு கப்பல்களும் 2026க்குள் கட்டி முடிக்கப்பட்டு கடற்படைக்கு டெலிவரி செய்யப்படும்.பயங்கர தாமதமாக தெரிகிறது.ஏற்கனவே இந்திய கடற்படையில் ஆறு தல்வார் ரக பிரைகேட் கப்பல்கள் செயல்பட்டு வருகின்றது.இந்த தல்வார் ரக கப்பல்களின் மேம்படுத்தப்பட்ட வகை தான் தற்போது இந்தியாவில் கட்டப்பட உள்ளது.
இந்த பிரைகேட் கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணை இணைக்கப்படும்.உக்ரேன் இரஷ்ய பிரச்சனை காரணமாக தான் இரஷ்யா தனக்காக கட்டி வந்த கப்பலை இந்தியாவிற்கு தர முன்வந்தது.உக்ரேன் இந்த கப்பல்களுக்கு என்ஜின் தர மறுத்துவிட்டது.
எனவே இந்தியா உக்ரேனிடம் இருந்து என்ஜின் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.