
கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளமான கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கடந்த செவ்வாய் அன்று நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்பு ஸ்டீல்த் கார்வெட் கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது.
புரோஜெக்ட் 28 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த நான்கு கமோர்த்தா வகை ஸ்டீல்த் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களில் கடைசி கப்பல் தான் கவரத்தி.இந்த கப்பலை தான் தற்போது கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது கார்டன் ரீச்.
முதல் மூன்று கப்பல்களான கமோர்த்தா, கட்மட் மற்றும் கில்டன் ஆகியவை இதற்கு முன்பே டெலிவரி செய்யப்பட்டு படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பல்கள் பல்வேறு ஆபரேசன்களில் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.ஐஎன்எஸ் கில்டன் 2019 மலபார் பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
90% இந்திய பொருள்கள் உதவியுடன் கட்டப்பட்ட இந்த கப்பல் அணு,வேதி மற்றும் உயிரி போர்க்களங்களில் கூட செயல்படும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.
எதிரிகளின் நீர்மூழ்கிகளை தேடி அழிப்பதற்கென்றே வடிவமைத்து இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.ஆழ்கடலோ அல்லது கடலோரமோ எதுவாயினும் மிகச் சிறப்பாக செயல்படும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.