
பிப்ரவரி 14,2019
2500 மத்திய ரிசர்வ் படை வீரர்களை ஏற்றி சுமார் 78 வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 44 வழியாம ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்தது.
அதிக அளவு வீரர்கள் செல்வதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னரே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டன. சூரியன் மறையும் முன்னரே இலக்கை அடைந்துவிடவும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
3.15மணி.அவந்திபோரா அருகே லேத்போரா பகுதியில் வெடிபொருள்களுடன் வந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த பஸ் மீது மோதி வெடித்தது.சில நொடிகளுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது.76வது பட்டாலியனை சேர்ந்த 40 வீரர்கள் வீரணமரணம் அடைந்தனர்.பல வீரர்கள் காயமடைய அவர்கள் பக்கத்தில் இருந்த ஸ்ரீநகர் இராணுவ தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பாக்கை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று தாக்குதலாளி குறித்த கானொளி ஒன்றும் வெளியிட்டது.காஷ்மீரின் காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது தார் என்ற 22 வயது ஒருவன் தான் இந்த தாக்குதலை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.எப்போதும் போல பாக் தனது தொடர்பை நிராகரித்தது.
12 பேர் கொண்ட என்ஐஏ குழு சம்பவத்தை விசாரிக்க அனுப்பப்பட்டது.காரில் 300கிகி அளவுள்ள வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டது என தகவல்கள் வெளியாகின.
நாடு முழுதும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.நாடே கோபத்தின் உச்சியில் நின்றது.
இதற்கு பழி தீர்க்க தான் பாலக்கோட் திட்டம் வகுக்கப்பட்டது.