
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள் பாக்கின் பயங்கரவாத முகத்தில் இந்தியா ஓங்கி அறைந்த நாள்.பாக்கின் பயங்கரவாத ஏற்றுமதி இனி இலவசமாக இருக்காது.அதற்கான விலையை பாக் தரவேண்டியிருக்கும் என புதிய இந்தியா நிரூபித்த நாள்.
ஒரு அணுஆயுத பலம் கொண்ட நாடு மற்றொரு அணுஆயுத பலம் கொண்ட நாட்டை கன்வென்சனல் ஆயதம்கொண்டு தாக்கிய நாள்.பாக்கிற்குள் ஆழ்நுழைந்து எந்த தடையும் இன்றி கைபர் பக்துன்வா பகுதியில் இயங்கி கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததின் விளைவாக சில மாதங்கள் பாக் தனது வான்பகுதியையே மூடியது.
அணு ஆயுத பலம் என்பது ஒரு நாட்டிற்கு மறுக்க முடியாத பலத்தை எதிரி நாடுகளுக்கு எதிராக வழங்கும்.ஆனால் மற்றொரு அணுஆயுத நாட்டை தாக்கினால் அந்த நாடும் பதிலுக்கு அணுஆயுதம் கொண்டு தாக்கலாம்.இது பேரழிவே.ஆனால் பாக்கின் இந்த அணுஆயுத பலம் இந்தியா பதிலடி கொடுப்பதை தடுக்க முடியவில்லை.
பல ஆண்டுகளாக பாக் தனது அணு ஆயுதங்களை வைத்து மிரட்டியுள்ளது.கார்கில் போரில் கிட்டத்தட்ட அதை உபயோகிக்கவும் தயாராகவே இருந்தது.ஆனால் இந்த முறை இந்தியா அஞ்சவில்லை.பதிலடி கொடுத்தது.
அதன் பிறகு இந்தியாவில் இந்த 12 மாதத்தில் பெரிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று தான் கூற வேண்டும்.ஏனெனில் இந்த தாக்குதல் பாக் தலைவர்களில் இருந்து தளபதிகள் வரை ஒரு செய்தியை கூறிவிட்டது.ஆம் இனி இந்தியா தாக்க தயங்காது என்பதே அது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு.ஒரு தேர்ந்த உண்மையான இராணுவம் கொண்ட நாடு.ஆம் நாம் பாக்கையோ அதன் மக்களையோ அல்லது இராணுவத்தையோ தாக்கவில்லை.பயங்கரவாத முகாம்களை தான் தாக்கினோம்.எந்த ஒரு தேவையில்லாத போருக்கோ அல்லது அணுஆயுத தாக்குதலுக்கோ எந்த வழியும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் மறுபுறம் பாக் வேண்டுமென்றே தாக்க வந்தது நமது இராணுவத்தை.இதிலிருந்தே அதன் போர்வெறியை காணலாம்.ஒருவேளை இந்தியா தற்போது பெற்றிருக்கும் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை பாக் பெற்றிருந்தால் இந்தியாவை இன்னேரம் அழித்திருக்கும்.இது போல் எல்லாம் நடக்காது என்று நீங்கள் நினைத்தால் சீனா-ஜப்பான் தாக்குதல்களை படிக்கலாம்.சின்னஞ்சிறிய நாடு ஜப்பான் உலகப்போர் காலத்தில் பெரிய அளவில் சீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
முடிந்த அளவு பொறுமை என்ற கோட்பாடுகள் உடைக்கப்பட்டன.சர்ஜிகல் தாக்குதல் என்பதே குறிப்பிடத்தக்க சாதனை எனும் போது அணுஆயுதம் மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டினுள் நுழைந்து தாக்கியது பெருமகிழ்ச்சியே அளிக்கிறது.
ஆனால் பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகான நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.அதன் பின் நாம் ஒரு மிக்-21 விமானத்தை இழந்ததும் விங் கமாண்டர் அபி அவர்கள் பிடிபட்டதும் அறிவோம்.நாமே நமது மி-17 வானூர்தியை சுட்டு வீழ்த்தினோம்.அதில் ஆறு விமானப்படை வீரர்கள் உட்பட ஏழு பேரை இழந்தோம்.
பாக் இந்திய ராணுவ முகாம்களை அழிக்க முயன்றதை பெருங்குற்றமாக எண்ணி பாக் மீது போர் தொடுக்கு இந்தியாவிடம் அனைத்து உரிமைகளும் இருந்தன.ஆனால் இந்தியா அதை செய்யவில்லை.