
இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனம் ஏவுகணை புரோபல்சன் அமைப்பு மேம்படுத்த தொழில்நுட்ப மேம்பாடு ஒப்பந்தத்தை இரஷ்யாவின் ரோசோபோரோனெ எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ளது.
டிஆர்டிஓவின் கிளை அமைப்பான அதிசக்தி மெட்டீரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இரஷ்ய நிறுவனத்திடம் இதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் மூலம் Advanced Pyrotechnic Ignition Systems மேம்படுத்தப்படும்.
அதிசக்தி மெட்டீரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இயக்குநர் கேபிஎஸ் மூர்த்தி அவர்கள் பேசுகையில் , இந்த ஒப்பந்தம் மூலம் எனர்ஜிடிக் மெட்டீரியல் மற்றும் பைரோடெக்னிக் தொழில்நுட்பம் துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு அதிநவீன உந்து அமைப்பு மேம்படுத்தப்படும்.
டிஆர்டிஓவின் இந்த அதிசக்தி மெட்டீரியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைப்பு ஏவுகணைகள் ,ராக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு தேவையான அதிசக்தி மெட்டீரியல்கள் மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மேம்பாடு மூலம் எதிர்காலத்திற்கு தேவையான அதிசக்தி படைத்த புரோபல்சன் அமைப்பு இந்தியாவிற்கு கிடைக்கும்.ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் புரோபல்சன் உதவியுடன் தான் பறக்கின்றன.
இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிர்கால ஏவுகணை போன்ற தயாரிப்புகளுக்கான திட ராக்கெட் மோர்ட்டார்களை வடிவமைத்து மேம்படுத்த முடியும்.