இரு பயங்கரவாதி வீழ்த்தி வீரமரணம் அடைந்த வீரர் ; திருமணமாகி இரண்டே வருடத்தில் உயிர் தியாகம்
1 min read

இரு பயங்கரவாதி வீழ்த்தி வீரமரணம் அடைந்த வீரர் ; திருமணமாகி இரண்டே வருடத்தில் உயிர் தியாகம்

ஸ்ரீநகரின் வெளிப்பகுதியில் லாவேபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.அந்த சண்டையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் நாம் ஒரு சிஆர்பிஎப் வீரரை இழந்துவிட்டோம்.சிஆர்பிஎப் வீரர் ரமேஷ் ரஞ்சன் எனும் வீரர் வீரமுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.பீகாரை சேர்ந்த ரமேஷ் அவர்கள் வீரமுடன் போரிட்டு இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளார்.

சிஆர்பிஎப் ஏடிஜிபி சுல்பிகர் ஹாசன் அவரது வீரத்தை பற்றி கூறுகையில் ” 73வது பட்டாலியன் சிஆர்பிஎப் வீரர்களின் செக்பாயிண்டில் தலைக்கவசம் இல்லாமல் ஸ்கூட்டரில் சென்ற மூன்று பேர் நிறுத்தப்பட்டனர்.ஸ்கூட்டரில் இருந்த மூன்றாவது நபர் கீழே இறங்கியவுடன் சிஆர்பிஎப் வீரர்கள் மீது சுட தொடங்கினான்.பயங்கரவாதிகளின் ஒரு தோட்டா சிஆர்பிஎப் வீரர் ரமேஷ் அவர்களின் தலைக்கவசத்தை தாக்கியது.ஆனால் அவர் தனது தைரியத்தை இழக்கவில்லை.பயங்கரவாதிகள் மீது திருப்பி சுடத் தொடங்கினார்.இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார் .”ஆனால் அதீத காயம் காரணமாக அவர் வீரமரணம் அடைந்தார்.

ரமேஷ் ரஞ்சன் அவர்கள் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தின் தேவ் தோலா பகுதியை சேர்ந்தவர்.ரஞ்சன் அவர்களுக்கு திருமணம் முடிந்து இரு வருடங்கள் தான் ஆகின்றது.அவரது அப்பா முன்னாள் காவல் துறை வீரர்.

கடந்த 2011ல் சிஆர்பிஎப் படையில் இணைந்த ரஞ்சன் அவர்கள் முதல் பணியாக ஒடிசாவில் பணிபுரிந்துள்ளார்.அதன் பிறகு ஜம்முவிற்கு பணிமாறுதல் பெற்று சென்றுள்ளார்.

வீரவணக்கம்