கேப்டன் பவன் குமார்

சேவை எண் : IC-78545K

பிறப்ப : ஜன 15, 1993

இடம் : ஜிந்த், ஹரியானா

சேவை : இராணுவம்

தரம்: கேப்டன்

பிரிவு : 10 பாரா (SF)

ரெஜிமென்ட் : பாராசூட்

விருது : சௌரிய சக்ரா

வீரமரணம் : பிப் 21, 2016

கேப்டன் பவன் குமார் (22) 10வது பாரா படை பிரிவு , எப்போதும் தனது சகாக்களை முன்னின்று வழி நடத்துபவர். “நான் ஒரு மகனை பெற்றேன்.அவனை இராணுவத்திற்கு  அர்பணித்தேன்.உலகில் என்னை போல் பெருமை கொண்ட அப்பா இருக்க முடியாது.இராணுவ தினத்தில் பிறந்த அவன் இராணுவத்தில் இணைவது விதி.1993ல் ஜன 15ல் பிறந்தான அவன்”  என தன் மகனை அவரது அப்பா ஸ்ரீ ராஜ்பீர் சிங் நினைவு கூர்கிறார்.

கேப்டன் பவன் குமார் தனது 22வது வயதில் இந்திய நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தார்.அவர் ஒரு தேர்ந்த பாரா கமாண்டோ வீரர். ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த பவன் அவர்கள் ஒரு ஜாட் ஆவார்.டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலையில் பட்டம் பெற்றவர்.

தான் வீரமரணம் அடைவதற்கு முன்னால் இரு ஆபரேசன்களில் கலந்து கொண்டுள்ளார்.இந்த ஆபரேசன்களில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.பிப்ரவரி 15 புல்வாமா அருகே நடைபெற்ற என்கௌன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

என்டிஏவில் வெற்றிகரமாக பயிற்சி முடித்து டிசம்பர் 14,2013ல் இராணுவத்தில் இணைந்துள்ளார்.10வது பாரா படையில் இணைந்து தனது பணியை தொடங்கியுள்ளார்.

பிப்ரவரி 20,2016 ஏகே 47 துப்பாக்கிகளுடன் நான்கு லஷ்கர் தீவிரவாதிகள் சீஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மேலும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டார்.உடனடியாக படைகள் சம்பவ இடத்திற்கு விரைய தீவிரவாதிகள் ஒரு அரசு கட்டிடத்திற்கு புகுந்து அங்கு பொதுமக்களை பிணையக் கைதிகளாக பிடித்தனர்.இராணுவம் மற்றும் மத்தியப் படைகள் கட்டிடத்தை சுற்றி வளைக்க போர் தொடங்கியது.

கவச வாகனங்கள் உதவியுடன் 120 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.தன் வீரர்களை எப்போதும் முன்னின்று நடத்தும் கேப்டன் வீரமுடன் முன்னின்று போரிட்டார்.எதிரிகள் ஏகே மற்றும் கிரேனேடுகள் கொண்டு தொடர்ச்சியாக தாக்கினர்.இதில் படுகாயமடைந்த பவன் வீரமரணம் அடைந்தார்.அடுத்த நாள் வரை நீண்ட இந்த ஆபரேசனில் மேலும் இரண்டு பாரா வீரர்களான கேப்டனா துசார் மகாசன் மற்றும் லா/நா ஓம் பிரகாஷ் வீரமரணம் அடைந்தனர்.

இந்த மொத்த நடவடிக்கைகளிலும் மூன்று பாரா வீரர்கள் ,4 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.பொதுமக்களை மீட்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக நாம் பெரிய விலை கொடுக்க வேண்டியதாய் போயிற்று.

கேப்டன் பவன் குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் போது “பவன்குமார் ஒரு அதிசக்தி கொண்ட இளைஞர்.உண்மையான கமாண்டர்” என லெட்.ஜென் டுவா புகழாரம் சூட்டினார்.

அவரது கடைசி முகப்புத்தக பதிவு
“Kisi ko reservation chahiye toh kisiko azadi bhai, humein kuch nahi chahiye bhai bas apni razai (Some want reservations, some even freedom, but I want nothing, just my blanket).”

கேப்டன் பவன் குமாய் தனது வீரர்களை முன்னின்று நடத்தினார்.பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு நடந்த சண்டையில் படுகாயமுற்ற கேப்டன் வீரச்சாவை அடைந்தார்.இதற்கு முன் நடந்த ஒரு என்கௌன்டரில் அவருக்கு காயம் இருந்தது.எனினும் இந்ந நடவடிக்கையில் அவர் தன்னார்வலாகவே வந்து வீரர்களை முன்னின்று நடத்தினார்.தனது படை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுத்துள்ளார்.

அவரது ஈடுஇணையற்ற தியாகம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

அன்றைய தினம் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்கள்

1.கான்ஸ்டபிள் ரானா
2.தலைமை காவலர் போலா சிங்

பாரா கமாண்டோ வீரர்கள்

3.கேப்டன் பவன் குமார்
4.கேப்டன் துசார் மகாஜன்
5.லான்ஸ் நாய்க் ஓம் பிரகாஷ்

வீரவணக்கம்