
இந்தியாவில் தற்போது நடைபெற உள்ள இராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள உக்ரேன் நாட்டு பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தங்களது BTR-4 amphibious 8×8 wheeled armoured personnel carrier (APC) வாகனத்தை இந்திய இராணுவத்திற்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.மேலும் இவற்றை இந்தியாவில் தயாரிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
Spetstechno Export என்னும் உக்ரேன் நிறுவனம் தான் BTR-4 APC தயாரித்து வருகிறது.மேலும் இதுவரை வெற்றிகரமாக மூன்று நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.கிட்டத்தட்ட 500 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தோனேசியா ,ஈராக் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இதுதவிர Spetstechno நிறுவனம் தனது Vilkha Multiple Launch Rocket System அமைப்பை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.சோவியத் கால BM-30 Smerch heavy MLRS-ஐ அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பை உக்ரேன் மேம்படுத்தியுள்ளது.130கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை துவம்சம் செய்ய வல்லது இந்த ராக்கெட் அமைப்பு.
