பிரம்மோஸ் வாங்க பல நாடுகள் போட்டி ; ஏற்றுமதிக்கும் தயார் என டிஆர்டிஓ அறிவிப்பு

  • Tamil Defense
  • February 7, 2020
  • Comments Off on பிரம்மோஸ் வாங்க பல நாடுகள் போட்டி ; ஏற்றுமதிக்கும் தயார் என டிஆர்டிஓ அறிவிப்பு

பிரதமர் மோடி அவர்களின் ஐந்து பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி திட்டத்தை அடுத்து பேசியுள்ள டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி , பல நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஐந்து பில்லியன் டாலர் ஏற்றுமதி என்பது சாதிக்க கூடியது தான் என்றும் அதில் டிஆர்டிஓ முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை என்பது டிஆர்டிஓ ஏற்றுமதி செய்ய நினைக்கும் தளவாடங்களில் மிக முக்கியமானது என சதிஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

300கிமீ தூரம் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை வாங்க பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் தங்களது விருப்பை தெரிவித்து வரும் வேளையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ரேடார்கள்,டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள்,வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மறறும் டோர்பிடோக்கள் என சகலமும் ஏற்றுமதிக்கான சாத்தியங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

அடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி என்ற பிரதமரின் டார்கெட்டை நோக்கி அனைவரும் ஒன்றாக பயனித்து அதை சாத்தியமாக்க வேண்டும் என கூறியுள்ளார்.