விக்கியில் சூப்பர் ஹார்னெட் விமானத்தை தரையிறக்கி சோதனை செய்ய உள்ள போயிங் நிறுவனம் !! ஆச்சரிய தகவல்கள்
போயிங் நிறுவனத் தயாரிப்பான. F/A-18 Super Hornet விமானத்தை நமது விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தரையிறக்கி ஸ்கி-ஜம்ப் சோதனை செய்ய உள்ளதாக மூத்த போயிங் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இராணுவக் கண்காட்சியில் பேசிய போயிங் நிறுவனத்தின் துணை தலைவர் தோம் பிரெக்ரென்ரிட்ஜ் இந்திய கடற்படையிடம் இது குறித்து பேசி வருகிறோம் என கூறியுள்ளார்.
சோதனை தொடர்பான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.விமானம் ski jump செய்வது குறித்து ஆராய்வோம் என அவர் கூறியுள்ளார்.லக்னோவில் தற்போது இராணுவ கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
குறைதூரத்தில் மேலும்புவதும் , கப்பல் பரப்பில் உள்ள வயர் அமைப்பு மூலம் தரையிறங்குவது குறித்து சோதனை நடத்தப்படும்.
இந்திய கடற்படையின் தேவைகளை உணர்ந்து அதிக சிமுலேசன் வேலைகள் செய்துள்ளதாகவும் சூப்பர் ஹார்னெட் விமானம் இப்போது உள்ள கப்பல் மற்றும் எதிர்காலத்தில் கட்டப்பட உள்ள கப்பல் என அனைத்திற்கும் பொருத்தும் வண்ணம் இருக்கும் என உறுதி தெரிவித்துள்ளார்.
அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் முழு ஆயுத எடையுடன் இந்திய விமானம் தாங்கி கப்பலில் இருந்து செயல்படும் திறன் ஹார்னெட் விமானத்திற்கு உள்ளது என கூறியுள்ளார்.
இந்திய கடற்படைக்கான பலபணி போர் விமானங்கள் வாங்கும் நடக்கும் போட்டியில் சூப்பர் ஹார்னெட் விமானமும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது