வீரர்களின் உயிரிழப்பை தடுக்க இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க திட்டம்

வீரர்களின் உயிரிழப்பை தடுக்க இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க திட்டம்

பிப்ரவரி 26 பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு மட்டும் இந்திய இராணுவம் 82 வீரர்களை இழந்துவிட்டது.இரவில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும் , அவர்களை எதிர்த்து இருட்டில் போரிடவும் இராணுவத்திற்கு ஆயிரக்கணக்கில் இரவில் பார்க்கும் கருவிகள் வாங்கப்பட உள்ளது.

தற்போது 22000 தொலைதூர இரவில் பார்க்கும் கருவிகள் இராணுவத்திற்கு வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முன்னனி காவல்நிலையில் இருக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும்.

Thermal Imaging Night Sights உதவியுடன் வீரர்கள் இருட்டில் கூட தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்க முடியும் மற்றும் அனைத்து காலநிலைக்கும் ஏற்றது என்பதால் நமது வீரர்களின் இரவில் போரிடும் திறன் அதிகரிக்கப்படும்.

ஏற்கனவே இந்த ரக கருவிகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

இந்த uncooled thermal imagine sight எடை குறைவானதாகவும் இரவில் தொலைதூர இலக்குகளை தூல்லியமாக தாக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது இராணுவத்தின் கோரிக்கை.

 ஏற்கனவே பாக் எல்லையில் உள்ள டேங்க் மற்றும் இலகு ரக இயந்திய துப்பாக்கிகள் இரவில் செயல்படும் வண்ணம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.