மாலத்தீவு நாட்டினர் உட்பட இரண்டாம் தொகுதி இந்தியர்கள் சீனாவில் இருந்து மீட்பு

7 மாலத்தீவு நாட்டினர் உட்பட இரண்டாம் தொகுதி இந்தியர்களை வுகானில் இருந்து இந்தியா மீட்டுள்ளது.இந்தியாவின் இந்த செயலுக்கு மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் நன்றி தெரிவித்துள்ளார்.

323 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா வந்தடைந்தது.அதில் 7 மாலத்தீவு நாட்டினரும் அடக்கம் ஆகும்.சீனாவில் இருந்து மக்களை இரண்டாம் முறையாக இந்தியா மீட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் வேளையில் 14000க்கும் அதிகமானோர் நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்சில நாடுகள் தங்கள் மக்களை சீனாவில் இருந்து மீட்டு வரும் வேளையில் சில நாடுகள் சீன நாட்டு மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதை தடை செய்துள்ளன.

சீனாவுடனான தனத நாட்டு எல்லையை தற்போது இரஷ்யா மூடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.