கொரோனா பாதிப்பு : தனது மக்களை மீட்க மாட்டோம் என பாக் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு : தனது மக்களை மீட்க மாட்டோம் என பாக் அறிவிப்பு

ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி இந்தியர்களை இந்தியா மீட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பாக் மக்களை மீட்க மாட்டோம் என பாக் தெரிவித்துள்ளது.

இதுவரை சீனாவில் உள்ள மக்களை மீட்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பாக் கூறியுள்ளது.நிலை குறித்து கவனித்து வருவதாகவும் , பாக் மாணவர்களின் நிலை குறித்து சீன அதிகாரிகளுன் பேசி வருவதாகவும் பாக் கூறியுள்ளது.

சீனாவின் ஹீபே மாகாணத்தில் இருந்து தனது நாட்டு மக்களை மீட்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முயற்சித்து வருகின்றன.ஹீபே மாகாணத்தில் உள்ள 60 மில்லியன் மக்களும் தற்போது வெளியேறா வண்ணம் தடுத்து வைத்துள்ளது சீனா.

இந்தியா சீனாவிடம் சிறப்பு அனுமதி பெற்று வுகான் பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது.

சீனா பாக் மாணவர்களை கவனித்து கொள்ளும் என பாக் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் பாக் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் என 500 பேர் மாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.