
சீனாவில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மருத்துவ நிலையம் அமைத்த இராணுவம்
சீனாவின் வுகான் பகுதியில் இருந்து 324 இந்தியர்களை மீட்டு டெல்லியில் தரையிறங்கியுள்ளது ஏர் இந்தியா விமானம்.மீட்கப்பட்டர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளது இந்தியா.
வுகானில் தான் இந்த கொரோனா தொற்று அதிகம் பரவியதாக பேசப்பட்ட நிலையில் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஒன்று தற்போது 324 இந்தியர்களை மீட்டு திரும்பியுள்ளது.
Boeing 747 Jumbo aircraft வுகானின் தியான்ஹி விமான நிலையத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு சனி அதிகாலை 7:26 am மணிக்கு டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விமானம் நிலையம் திரும்பியுள்ளது.
இந்தியா திரும்பிய பயணிகளை மருத்துவர்கள் வைரஸ் தொற்று சோதித்த பின் மனேசரில் இந்திய இராணுவத்தின் மருத்துவ பிரிவு அமைத்த கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Chhawla என்னுமிடத்தில் இந்தோ திபத் எல்லைப் படையும் ஒரு மருத்துவனையை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் இந்த இந்த சிறப்பு மருத்துவ வசதியை இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் இருந்து வரும் இந்தியர்கள் இந்த சிறப்பு மருத்துவமனைகளில் தங்கவைக்கப்பட்டு நோய் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கண்காணிப்படுவர்.
இதற்கென தேவையான கண்கானிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதை மத்திய ஹெல்த் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
போயிங் 747 ஒரு இரு அடுக்கு விமானம் ஆகும்.ஏர் இந்தியாவிலேயே உள்ள ஒரு பெரிய விமானமும் ஆகும்.மும்பையில் இருந்து கிளம்பிய இந்த விமானம் டெல்லியில் தேவையான முகமூடி மற்றும் மருத்துவ உபகரங்களுடன் சீனா சென்றது.அங்கு இந்தியர்களை மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டர்.
இதில் ஆறு இந்தியர்களுக்கு அதிக வெப்பத்தோடு இருந்ததால் சீன அதிகாரிகள் அவர்கள் ஆறு பேரை வெளியேற விட மறுத்த காரணத்தால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
சிறப்பு விமானத்திற்கு அனுமதி வழங்கிய காரணத்தால் சீனாவிற்கு இந்தியா நன்றியையும் பதிவு செய்துள்ளது.மீட்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் மாணவர்களே.
இந்தியா மேலும் ஒரு முறை சீனாவிற்கு விமானத்தை அனுப்பி இந்தியர்களை மீட்க உள்ளது.
ஏற்கனவே பயணம் செய்த விமான குழு இதில் செல்ல மாட்டர்.ஆனால் அதே மருத்துவர்கள் குழு செல்ல உள்ளது.
கொரானா பாதிப்பிற்கு இதுவரை 259பேர் பலியாகியுள்ளனர்.11800 பேர் தொற்றுக்காளாகியுள்ளனர்.
Selva
Editor in chief
Tamil defence