
இறக்குமதி தொகை மற்றும் மற்ற செலவினங்களை கட்டுப்படுத்த இனி டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்தே பெற இராணுவம் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளதாகவும் ,தேவைக்கேற்ப ஆர்டர் அதிகரிக்கப்படும் எனவும் இராணுவம் கூறியுள்ளது.
மூன்றாம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை புரோஜெக்ட் மூலம் பெறப்படும் ஏவுகணைகள் பழைய மிலன் மற்றும் கொனூர்ஸ் ஏவுகணைகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்படும்.டிஆர்டிஓ தவிர்த்து இந்திய நிறுவனங்கள் சிலவும் இந்த ஏவுகணை மேம்பாட்டில் உள்ளன.
இந்திய தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இதற்கான ஆர்வத்தை வெளியிட இராணுவம் வேண்டியுள்ளது.கலந்து கொள்ளும் நிறுவனங்களின் ஏவுகணைகளை சோதித்து டென்டர் வழங்கும் இராணுவம்.
இராணுவம் தற்போது உபயோகிக்கும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் அனைத்தும் மூன்று தலைமுறை பழையன.எனவே தான் அவசர அவசரமாக இஸ்ரேலிடம் இருந்து சில தொகுதிகள் ஸ்பைக் பெற்றது.எனவே தான் மற்ற நவீன இராணுவத்தை போலவே புதிய மூன்றாம் தலைமுறை ஏவுகணைகள் வாங்க இராணுவம் முயற்சித்து வருகிறது.
இந்த புதிய ரக ஏவுகணைகள் நல்ல துல்லியத்தன்மை,திறன், அதிக கொல்லும் திறன் ,இரவு மற்றும் பகல் நேரத்தில் செயல்படும் திறன் மற்றும் செயல்படுத்தும் வீரர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும்.
இப்போதைக்கு தேர்ந்தெடுக்கும் நிறுவனத்திற்கு 101 லாஞ்சர்கள் மற்றும் 2330 ஏவுகணைக்கான ஆர்டர் வழங்கப்படும்.அதன் பிறகு தேவைக்கேற்ப ஆர்டர் அதிகமாக வழங்கப்படும்.