42 நாடுகளுக்கு இராணுவ தளவாட ஏற்றுமதி; சாதனை படைக்கும் இந்தியா

  • Tamil Defense
  • February 11, 2020
  • Comments Off on 42 நாடுகளுக்கு இராணுவ தளவாட ஏற்றுமதி; சாதனை படைக்கும் இந்தியா

மிகப் பெரிய இராணுவ தளவாட இறக்குமதி நாடாக இருந்தாலும் மிகச் சிறிய அளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது.மேலும் அதை கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்தும் வருகிறது.

உலகிலேயே ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கும் பெரிய நாடுகளான அமெரிக்கா,ஆஸ்திரேலியா,பின்லாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கும் சிறிய அளவில் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா.

அஜர்பைஜான்,சீசெல்ஸ்,எஸ்தோனியா,இந்தோனேசியா,கினியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

ஸ்டேட் டிபன்ஸ் அமைச்சர் சிரிபட் நாய்க் ராஜ்ய சபாவில் அளித்த தகவலில் இவற்றை உறுதி படுத்தியுள்ளார்.விலை மற்றும் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறும் எனவும் ,வெளிநாட்டு நிதி மாற்றம் குறித்த தகவல்கள் அமைச்சகத்திடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

5.56x45mm Ball MK N(SS109) கேட்ரிட்ஜ்களை ஆஸ்திரேலியாவுக்கும் , பாதுகாப்பான ஹெட்கியர்கள் மற்றும் கடின ஆர்மர் பிளேட்டுகளை அஜர்பைஜான் நாட்டிற்கும், தலைக்கவசம், bomb suppression blanket மற்றும் இலகு ஆர்மர் பேனல்களை ஜெர்மனிக்கும், தூங்கும் பைகளை கினியாவிற்கும்,மோர்ட்டார் ஷெல் கவர்களை இஸ்ரேலுக்கும்,கடின ஆர்மர் பிளேட்டுகளை நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கும், ரேடார் பாகங்கள்,குண்டு துளைக்காத உடைகள் ,தலைக்கவசத்துடன் அதன் பாகங்களை சிங்கப்பூருக்கும்,வெடிப்பான்களை தென் ஆப்பிரிக்காவிற்கும் மற்றும் இரவில் பார்க்கும் பைனாகுலர்களை தாய்லாந்திற்கும் ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா.

உடல்காக்கும் உபகரணங்களை சேர்ந்த தளவாடங்களை கத்தார்,லெபனான்,ஈராக்,ஈக்குவாடார்,உருகுவே,ஜப்பான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது.

லக்னோவில் நடந்த இராணுவக்கண்காட்சிக்கு பிறகு இந்த தகவலை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார் அமைச்சர் அவர்கள்.ராணுவ கண்காட்சியில் 1000 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன.

2014ல் 2000கோடி அளவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது.அதன் பிறகு கடந்த இரு ஆண்டுகளில் அது 17000 கோடி அளவுக்கு உள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35000 கோடி ஏற்றுமதி என்ற இலக்கை அரசு நிர்ணயித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.