Breaking News

டிஆர்டிஓ மேம்படுத்திய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு-அமெரிக்க அதிபரை பாதுகாக்க களமிறக்கம்

  • Tamil Defense
  • February 22, 2020
  • Comments Off on டிஆர்டிஓ மேம்படுத்திய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு-அமெரிக்க அதிபரை பாதுகாக்க களமிறக்கம்

இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு அமெரிக்க அதிபர் வருகையில் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் களமிறக்கப்பட்டுள்ளது.வரும் பிப் 24 அன்று இந்தியா வரும் ட்ரம்ப் அவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களை வீழ்த்த இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பு மேம்படுத்திய ஆன்டி ட்ரோன் அமைப்பும் களமிறக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவுப் படை ,உள்ளூர் காவல்துறை,மாநில ரிசர்வ் படை ,செடக் கமாண்டோ படை ,பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஆகிய படைகள் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களோடு தேசியப்பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 1,10,000 மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் எந்த தொல்லையும் ஏற்படாத வண்ணம் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.