இந்தியா-இரஷ்யா உறவில் பாதிப்பா ? அமெரிக்க துப்பாக்கிகள் வாங்குவதில் இரஷ்ய நிறுவனம் அதிருப்தி

  • Tamil Defense
  • February 7, 2020
  • Comments Off on இந்தியா-இரஷ்யா உறவில் பாதிப்பா ? அமெரிக்க துப்பாக்கிகள் வாங்குவதில் இரஷ்ய நிறுவனம் அதிருப்தி

அமெரிக்கா-இரஷ்யா பிரச்சனையை தாண்டி இந்தியாவிற்கு ஆயுதம் வழங்குவதில் இரு நாடுகளும் போட்டி போட்டு வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்காவின் சிக் சார் துப்பாக்கிகள் இந்தியா வாங்குவதில் அதிருப்தி தெரிவித்துள்ளது இரஷ்ய ஆயுத தயாரிப்பு நிறுவனமான கலாஷ்நிகோவ்.மேலும் இதை வழக்கத்திற்கு மாறான நிகழ்வு எனவும் கூறியுள்ளது.

இந்தியா தனது முன்னனி இன்பான்ட்ரி வீரர்களுக்காக 72,400 சிக் சார் தாக்கும் துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து பெறும் அதே வேளயைில்
இரஷ்யாவின் கலாஷ்நிகோவ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் AK-203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.இந்த துப்பாக்கிகள் தற்போது படையில் உள்ள இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது.

“சிக் சார் துப்பாக்கிகளை இந்தியா ஏன் வாங்குகிறது என எங்களுக்கு தெரியவில்லை.ஏனெனில் இந்த ரக துப்பாக்கிகள் பாதி தானியங்கி ஸ்னைப்பர் துப்பாக்கிகள்.இவற்றை அடிப்படை இன்பான்ட்ரி வீரர்களுக்கு எதன் அடிப்படையில் இந்தியா வழங்க உள்ளது என தெரியவில்லை.என்ன திட்டம் என எங்களுக்கு தெரியவில்லை.எந்த வீரர்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட போகிறது இந்தியா என தெரியவில்லை” என கலாஷ்நிகோவ் குழு தலைவர் அலெக்சாண்டர் ஒனோகோய் தெரிவித்துள்ளார்.

இரு துப்பாக்கிகளை ஒப்பிட்டு அவர் பேசுகையில் ” ஏகே-203ஐ பற்றி பேசினால் அது ஒரு திறன் நிரூபிக்கப்பட்ட துப்பாக்கி.தரைப்படை வீரர்களுக்கான சிறந்த ஆயுதம்.இது தான் சரியான தேர்வு என நாங்கள் நம்புகிறோம்.ஆனால் சிக் சார் 716 7.62*51 குண்டுகள் உபயோகிப்பதால் குறைந்த ரீகாயில் பெற்றுள்ளது.மேலும் அனைத்து வீரர்களாலும் இந்த துப்பாக்கியை நன்றாக பயன்படுத்த முடியாது.இது இந்திய இராணுவத்தை பொறுத்தது தான்.ஆனால் இன்பான்ட்ரி வீரர்களுக்கு ஏகே-203 தான் சிறந்த ஆயுதம்” என கூறியுள்ளார்.

ஏகே-203 துப்பாக்கி பற்றி பேசுகையில் ; ஏகே-203 ஒரு புதிய தலைமுறை தாக்கும் துப்பாக்கி.இந்த துப்பாக்கியை இந்தியா-இரஷ்யா இணைந்து இந்தியாவின் அமேதியில் தயாரிக்க உள்ளது.ஏகே-47 துப்பாக்கியின் புதிய ரகம் தான் இந்த ஏகே-203.இந்திய வீரர்களுக்கு சிறந்த ஆயுதம் வழங்கப்பட வேண்டும்.அது ஏகே தான் என பேசியுள்ளார்.

“இதில் அனைத்தும் எளிதே.இந்திய வீரர்கள் அனைவரும் ஏகே எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என அறிவர்.

கடந்த டிசம்பர் முதல் சிக் சார் துப்பாக்கிகளை படையில் இணைக்க தொடங்கியது இந்திய இராணுவம்.இது தவிர ஸ்னைப்பர் துப்பாக்கிகளுக்கு 21 லட்சம் ரவுண்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

முதல் தொகுதி 10,000 SiG 716 துப்பாக்கிகள் இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளையக பிரிவிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.72400 புதிய துப்பாக்கிகளுக்காக 700 கோடி அளவிலான ஒப்பந்தம் ஏற்கனவே போடப்பட்டிருந்தது.

இந்த துப்பாக்கிகளின் பெரும்பான்மை இராணுவத்திற்கும்( 66,000 ) மீதமுள்ளவை கடற்படைக்கும் (2,000) மற்றும் விமானப்படைக்கும் (4,000) வழங்கப்படும்.