ஏகே-203 ரைபிள்கள் வாங்கும் ஒப்பந்தம்-விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது

  • Tamil Defense
  • February 25, 2020
  • Comments Off on ஏகே-203 ரைபிள்கள் வாங்கும் ஒப்பந்தம்-விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது

இந்த புதிய துப்பாக்கிகள் தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.இதற்கு முன் பலமுறை முயன்றும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

விலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவு பெற்றுள்ளதால் இறுதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ரைபிள்களை இந்தியாவில் தயாரிக்க இந்தியாவின் ஆர்டினன்ஸ் பேக்டரி மற்றும் கலாஷ்நிகோவ் இணைந்து இந்தியா-இரஷ்யா ரைபிள்ஸ் லிமிடெட் தொடங்கியுள்ளன.

இந்திய படைகளுக்கு மொத்தமாக 670000 ஏகே-203 துப்பாக்கிகள் தேவை.அவற்றுள் ஒரு லட்சம் துப்பாக்கிகள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இந்தியாவில் தயாரிப்பு யுனிட் அமைப்பது உள்ளிட்டு ஒரு ரைபிளின் விலை 1100டாலர்கள் ஆகிறது.