ஆஹா….!! F-15EX விமானத்தை இந்தியாவிற்கு வழங்க அனுமதி வேண்டும்-அமெரிக்காவிற்கு போயிங் நிறுவனம் வேண்டுகோள்

  • Tamil Defense
  • February 13, 2020
  • Comments Off on ஆஹா….!! F-15EX விமானத்தை இந்தியாவிற்கு வழங்க அனுமதி வேண்டும்-அமெரிக்காவிற்கு போயிங் நிறுவனம் வேண்டுகோள்

இந்தியா தனது விமானப்படைக்கு விமானங்கள் வாங்க நீண்ட காலமாக போராடி வருகிறது.இதற்காக பல நிறுவனங்கள் தங்களது விமானங்களை இந்தியாவிற்கு தர போட்டியில் உள்ளனர்.அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தனது F/A-18E/F விமானத்தை ஏற்கனவே போட்டிக்கு அனுப்பியுள்ள நிலையில் தற்போது தனது நவீன
F-15EX விமானத்தையும் இந்தியாவிற்கு அளிக்க அனுமதி வேண்டி அமெரிக்க அரசை நாடியுள்ளது போயிங் நிறுவனம்.

இந்தியா தனது விமானப்படைக்காக 110 விமானங்கள் வாங்க உள்ள நிலையில் தற்போதள இந்த முடிவை போயிங் நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த புதிய முடிவை எடுத்திருந்தாலும் விமானப்படைக்கும்,கடற்படைக்கும் F/A-18 சூப்பர் ஹார்னெட் விமானங்களை வழங்க போயிங் தொடர்ந்து முயற்சிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து ஏற்றுமதிக்கான அனுமதி போயிங் நிறுவனத்திற்கு கிடைக்கும் பட்சத்தில் போயிங் நிறுவனம் எப்-15EX விமானங்களை இந்தியாவிற்கு விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இறங்கும்.

போயிங் எப்-15 விமான ரகத்திலேயே மிகவும் நவீன EX ரகத்தை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.ஏஇஎஸ்ஏ ரேடார் அதிக எடை சுமக்கும் திறன் ஆகியவை இதில் அடக்கம்.

தற்போது லாக்ஹீடு மார்ட்டினின் எப்-16, சாப் நிறுவனத்தின் கிரிப்பன்,ரபேல்,டைபூன் மற்றும் சூப்பர் ஹார்னெட் மற்றும் இரஷ்யா சார்பில் மிக்-35 கலந்து போட்டியில் உள்ளன.

இது தவிர்த்து கடற்படைக்காக 57 விமானம் பெறும் ஒப்பந்தம் போட்டியிலும் சூப்பர் ஹார்னெட் விமானம் கலந்துள்ளது.