காஷ்மீரில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது : பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்

  • Tamil Defense
  • February 12, 2020
  • Comments Off on காஷ்மீரில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது : பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்

காஷ்மீரில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டத்தில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளும் ஐஎஸ்கேஜே எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள்.

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது மற்றும் ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் இவர்கள் தொடர்புடையவர்கள்.

அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஷாநவாஸ் அகமது வானி

நாசிர் அகமது வானி

பிலால் அகமது கான்

இர்பான் அகமது பதான்

அலி முகமது பாட்

ஆகிய பயங்கரவாதிகள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மூவர் பீர்வா பகுதியையும் இருவர் வரிஹாமா பகுதியையும் சேர்ந்தவர்கள்.