Breaking News

முழு வேகத்தில் நடைபெறும் கே-5 பலிஸ்டிக் ஏவுகணை மேம்பாடு

புதிய கே-5 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணை 5000கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.அதாவது அக்னி-5 ஏவுகணையின் கடற்வகை என கூறலாம்.அக்னி-5 தரைப்படை வகை.5000கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.இரண்டுமே நமது டிஆர்டிஓ அறிவியலாளர்களால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.கே-5 ஏவுகணை நான்கு தனித் தனி அணு வார்ஹெட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது ஏவுகணையின் மேல் கூம்பு பகுதியில் நான்கு தனித்தனி அணு வெடிபொருள் இருக்கும்.இலக்கை ஏவுகணை நெருங்கும் போது இந்த நான்கு அணு வெடிபொருள்களும் தனித்தனியான நான்கு இலக்குகளை தாக்கும்.

தற்போது மேம்பாட்டில் உள்ள கே-5 ஏவுகணை எதிர்கான அரிகந்த் ரக நீர்மூழ்கிகளில் இணைக்கப்படும்.இந்த கே-5 நீர்மூழ்கி படையில் இணைக்கப்பட்டால் இந்தியா தேர்ந்த முப்பரிமாண தாக்கும் திறனை பேரும்.அதாவது இந்தியாவால் மற்ற நாடுகளை நீர்,நிலம் மற்றும் வானம் என மூன்றின் வழியாக அணுஆயுத தாக்குதல் நடத்த முடியும்.உலகின் வெகுசில நாடுகளே இந்த வகை ஆற்றலை பெற்றுள்ளன.சீனா,இந்தியா,இரஷ்யா,அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த திறனை பெற்றுள்ளன.

தற்போது கே-4 ரக நீர்மூழ்கி பலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்டு படையில் இணைய தயாராகி வருகிறது.கடந்த 19 ஜனவரி அன்று நீர்மூழ்கி ஏவு அமைப்பு ஒன்றின் வழியாக கே-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அதன் பிறகு ஆறே நாட்களில் , அதாவது 24 ஜனவரி மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு அதன் திறன் நிரூபிக்கப்பட்டது.இத்துடன் ஏவுகணை தொடர் தயாரிப்புக்கு உள்ளாக்கப்படும்.அதாவது இனி இரகசியமாக தயாரிக்கப்பட்டு நீர்மூழ்கிகளில் இணைக்கப்படும்.

3500கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியத்தன்மையோடு தாக்க வல்லது இந்த கே-4 ஏவுகணை.கே என்பது கலாம் ஐயா அவர்களை குறிக்கும்.தற்போது கே-15 ஏவுகணை தான் நமது நீர்மூழ்களில் செயல்பாட்டில் உளளது.இவை 750கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க கூடியவை.

Leave a Reply

Your email address will not be published.