புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நிதி உதவிகள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை. “புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.வீரமரணத்திற்கு பணம் ஈடு இல்லையெனினும் வீரர்களின் உற்றவர்களுக்கு தேவையான நிதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்” என சிஆர்பிஎப் கூறியுள்ளது. 40 சிஆர்பிஎப் வீரர்களின் அடுத்த வாரிசு எனப்படும் next of kins (NOKs) க்கு அனைத்து […]
Read Moreஆந்திர காவல்துறையால் தொடங்கப்பட்ட ஆபரேசன் டால்பின் நோஸ் எனும் நடவடிக்கை தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் இதுவரை 11 கடற்படை வீரர்கள் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக வலைத்தளங்கள் வழியாக கடற்படை குறித்த இரகசிய தகவல்களை எதிரி நாட்டுக்கு பரப்பியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பாக்குடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் வீரர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நாட்டின் முக்கிய கடற்படை தளங்களான விசாகப்பட்டிணம்,கார்வார் மற்றும் மும்பை தளங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் […]
Read Moreஇந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு அமெரிக்க அதிபர் வருகையில் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் களமிறக்கப்பட்டுள்ளது.வரும் பிப் 24 அன்று இந்தியா வரும் ட்ரம்ப் அவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களை வீழ்த்த இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பு மேம்படுத்திய ஆன்டி ட்ரோன் அமைப்பும் களமிறக்கப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படை ,உள்ளூர் காவல்துறை,மாநில ரிசர்வ் படை ,செடக் கமாண்டோ படை ,பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஆகிய படைகள் முக்கிய இடங்களில் […]
Read Moreபாக் இராணுவத்தின் பேட் பயங்கரவாத குழுக்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்த்துவதற்கு முன்பே அழிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என தளபதி நரவனே அவர்கள் கூறியுள்ளார். இதற்கான உளவு தகவல்களை நாங்கள் தொடர்ந்து பெற்ற வண்ணம் உள்ளோம் எனவும் தாக்குதல் நடத்த அவர்கள் கிளம்பும்போதே அவர்கள் அழிக்கப்படுவார்கள் என தளபதி தெரிவித்துள்ளார். பாக்கின் பேட் படை என்பது பாக் இராணுவமும் ஜெய்ஸ் ,லஷ்கர் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் இணைந்த அமைப்பாகும்.இவர்கள் எல்லையில் ரோந்து செல்லும் வீரர்கள் […]
Read More