பாகிஸ்தான் குண்டுகள் கேரளாவில் கண்டுபிடிப்பு; விசாரணையை தொடங்கியது புலனாய்வு அமைப்பு

  • Tamil Defense
  • February 24, 2020
  • Comments Off on பாகிஸ்தான் குண்டுகள் கேரளாவில் கண்டுபிடிப்பு; விசாரணையை தொடங்கியது புலனாய்வு அமைப்பு

கேரளா காவல் துறை 14 குண்டுகளை கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் திருவனந்தபுரம்-தென்மலா சாலையில் குழத்துபுழா என்னும் இடத்தில் உள்ள ஒரு பாலத்திற்கு கீழே நெடுந்தூரம் சுடும் ரைபிள் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட இந்த குண்டுகளில் பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் பேக்டரி எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக கேரள காவல் துறையினர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கேரளா டிஜிபி லோகநாத் பெகிரா அவர்கள் கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த குண்டுகள் வெளிநாட்டு தயாரிப்பு எனவும்,பயங்கரவாத எதிர்ப்பு ஸ்குவாட் இந்த விசாரணையை நடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசியப் புலனாய்வு துறை அமைப்பும் இந்த 14 குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை விசாரணை செய்து வருகின்றனர்.