Breaking News

Mi-26 வானூர்தியின் வாழ்நாளை அதிகரிக்க முடிவு; இரஷ்யா செல்கிறது

 Mi-26 வானூர்தியின் வாழ்நாளை அதிகரிக்க முடிவு; இரஷ்யா செல்கிறது

இந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள
Mi-26 heavy-lift வானூர்தியின் வாழ்நாளை அதிகரித்து செயல்படும் காலத்தை நீட்டிக்க இரஷ்யா அனுப்பப்பட உள்ளது.

இந்த வானூர்திகள் தற்போது அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ள  CH-47 Chinooks வானூர்திகளுடன் இணைந்து செயல்பட உள்ளது.வீரர்கள் மற்றும் தளவாடங்களை முன்னனி நிலைக்கு கொண்டு செல்ல இந்த வானூர்தி அணிகள் பயன்படுத்தப்படும்.

விமானப்படையில் தற்போது மூன்று Mi-26 வானூர்திகள் உள்ளன.உலகிலேயே பெரிய கனமான வானூர்திகள் இவைகள் தான்.சன்டிகரில் உள்ள 126 வானூர்தி யூனிட்டில் தான் இந்த வானூர்திகள் இயங்கி வருகின்றன.இந்த யூனிட் தான் சின்னூக் வானூர்திகளும்.

இதில் இரு மி-26 வானூர்திகள் பறக்கும் நிலையிலேயே இல்லை.எனவே அவை பகுதிகளாக பிரிக்கப்பட்டு இரஷ்யாவிற்கு அனுப்பப்படும்.மூன்றாவது வானூர்தி பறக்கும் நிலையில் இருந்தாலும் செலவுகளை பொருத்து அந்த வானூர்தியை எவ்வாறு இரஷ்யா அனுப்பப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வானூர்தியும் மீண்டும் பறக்கும் நிலையை அடைய 10முதல் 12 மாதங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.