அதிநவீன சீ செப்டார் ஏவுகணை அமைப்பை இந்திய கடற்படைக்கு வழங்க தயார்-L&T MBDA அறிவிப்பு
இந்திய கடற்படை குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு தேவைக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.இதற்காக L&T MBDA Missile Systems Ltd நிறுவனம் தனது அதிநவீன Sea Ceptor naval air defence system அமைப்பை இந்திய கடற்படைக்கு அளிக்க முன்வந்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இந்த Sea Ceptor அமைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும்.எதிரியின் ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து போர்க்கப்பலுக்கு இந்த ஏவுகணை அமைப்பு முழு பாதுகாப்பு வழங்கும்.
இது தவிர தற்போது வர உள்ள டிபன்ஸ்எக்ஸ்போ 2020ல் ATGM anti-tank guided missile அமைப்பின் சிமுலேட்டர் ஒன்றும் கண்காட்சியில் இடம்பெறும்.இது Larsen & Toubro (L&T) மற்றும் European MBDA நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு ஆகும்.
இது தவிர இந்த நிறுவன இணை
குறைதூரம் செல்லும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Exocet MM40 Block 3 ஏவுகணையை கடற்படைக்கு அளிக்க முன்வந்துள்ளது.
ரபேல் விமானத்திற்காக
MICA air-to-air missile systems, METEOR , SCALP ஏவுகணைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு Advanced Light Helicopter (ALH) Dhruv மற்றும் Light Combat Helicopter (LCH) ஆகிய வானூர்திகள் MBDA நிறுவனத்தின் Mistral ATAM air-to-air missile launchers பயன்படுத்துகின்றன.