சீனா எல்லையில் அதிநவீன ரக ஆயுதங்களை களமிறக்கும் இந்திய இராணுவம்; பணிகள் தொடக்கம்
4057கிமீ நீளமுள்ள இந்தியா சீனா எல்லையில் இந்தியா நவீன ஆயுதங்களை நிலைநிறுத்தி வருவதாக ஏற்கனவே 2018ல் தனது கருத்தை பதிவு செய்திருந்தது சீனா.அமைதி முயற்சிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் இந்தியா செயல்படுவதாகவும் குற்றாச்சாட்டை பதிவு செய்தது சீனா.
இது போன்ற அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை இந்தியா தவிர்க்க வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் நவீன ரக ஆயுதங்களை சீன எல்லைக்கும் அதிக ஆயுதங்களை பாக் எல்லைக்கும் நகர்த்தி வருவதாக புதிதாக பதவியேற்ற தளபதி நரவனே அவர்கள் தெரிவித்திருந்தார்.மேலும் சீன எல்லையில் உள்ள இராணுவம் சார் கட்டுமானங்களை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இரு நாடுகளுடனான எல்லையும் முக்கியம் எனவே இரு நாட்டு எல்லையிலும் படையை நகர்த்தி வருகிறோம் என தெரிவித்திருந்தார்.
இது தவிர சீனா-பாக் உறவு அதிகரித்து வரும் வேளையில் மூன்று நாடுகளின் முச்சந்தியாக உள்ள சியாச்சின் பகுதியில் இந்திய இராணுவம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தளபதி தெரிவித்திருந்தார்.
தளபதி நரவனே ஏற்கனவே கிழக்கு இராணுவ கட்டளையகம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் கமாண்டராக இருந்துள்ளார்.இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை அந்தந்த பகுதியில் ஓரளவுக்கு சரிசெய்துள்ளதாகவும் அப்படி மோதல் ஏற்படும் பட்சத்தில் அது அங்கேயே பேசி சுமூகமாக தீர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
திடீரென ஏற்படும் மோதல் போன்ற சம்பவங்களை தடுக்க இந்திய இராணுவத்தின் இராணுவ ஆபரேசன் தலைவர் மற்றும் சீன இராணுவத்தின் மேற்கு தியேட்டர் கமாண்டிற்கும் இடையே military hotline ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மோதல் போக்குகளை உடனே பேசி சரிசெய்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் அமைதி முயற்சியும் மறுபக்கம் அருணாச்சலில் உள்ள பழைய முன்னனி தரையிறங்கு தளங்களை மறுசீரமைப்பு செய்தல்,சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல் என இராணுவம் சார் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
எம்777, பிரம்மோஸ் மற்றும் விரைவில் ரபேல் என நவீன ஆயுதங்களையும் இந்தியா களமிறக்கி உள்ளது.