காஷ்மீர் முதல் அணுசார் ஒப்பந்தம் வரை- சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் பிரான்ஸ்

காஷ்மீர் முதல் அணுசார் ஒப்பந்தம் வரை- சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் பிரான்ஸ்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு வரை இந்தியாவிற்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்திராவிற்கு எதிராக சீனா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பேசியது பிரான்ஸ்.மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா 370 சரத்தை நீக்கிய பிறகும் கூட காஷ்மீர் பிரச்சனை இந்தியாவினுடைய உள்நாட்டு விவகாரம் என பிரான்ஸ் கூறி வந்துள்ளது.

அமெரிக்காவே கூட காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதாக தொடர்ந்து கூறி வருகிறது.ஆனால் பிரான்ஸ் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்திய ஆதரவு நிலைப்பாடில் உள்ளது.பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடு ஆகும்.

இரு நாடுகளின் அரசியல் கட்சி ஆளுதல் தவிர்த்து இந்திய ஆதரவு என்பது பிரான்ஸ் வெளியுறவுக் கொள்கையில் ஒன்று ஆகும்.பாதுகாப்பு உறவு தாண்டியும்
 Missile Technology Control Regime (MTCR), the Wassenaar Arrangement மற்றும் Australia Group என பல முக்கிய குழுக்களில் இந்தியா இணையவும் பிரான்ஸ் ஆதரவு அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியாவின் நிரந்திர உறுப்பினர் கோரிக்கைக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

1953ல் டசால்ட் நிறுவனம் மேம்படுத்திய  ‘Toofani’ போர் விமானம் வாங்கியது முதல் பிரான்ஸ் இந்தியா இடையிலான இராணுவ உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.தற்போது 2020ல் ரபேல் விமானம் வாங்கியது வரை இந்தியா பிரான்ஸ் உறவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா-இரஷ்ய உறவுக்கு குறைந்தது அல்ல இந்தியா-பிரான்ஸ் உறவு.மிராஜ் விமானங்கள்,ஸ்கார்பின்,ரபேல் என அதிநவீன தளவாடங்களை இந்தியாவிற்கு வழங்கி இந்தியாவின் இராணுவத்தை தொடர்ந்து பலம் வாய்ந்ததாக வைத்திருக்க பிரான்ஸ் உதவியுள்ளது.

அமெரிக்கா போல் அல்லாமல் பிரான்ஸ் இந்தியாவிற்கு வழங்கிய அதே தளவாடங்களை பாகிஸ்தானுக்கு வழங்காது.

அதே போல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிரான்சுக்கு உற்ற நண்பனாக இந்தியா இருந்து வந்துள்ளது.

இரு நாட்டு இராணுவங்களும் சக்தி என்ற போர்பயிற்சியும்,கடற்படைகள் வருணா என்ற போர்பயிற்சியும் ,விமானப்படைகள் கருடா என்ற போர்பயிற்சியும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.