பிஎஸ்எப் வீரர்களை தாக்கி ஆயுதங்களை கொள்ளை அடித்த வங்கதேசத்தவர்கள்
மேகாலயா-பங்களாதேசம் எல்லையில் தான இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்தியா பாகிஸ்தான் எல்லை போன்றே இந்திய வங்கதேச எல்லையையும் எல்லைப் பாதுகாப்பு படையே காவல் காக்கிறது.
அதே போல மேகலாயாவில் உள்ள ஒரு வெளி நிலையில் பணியில் இருந்த இரு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை கடுமையாக தாக்கி அவர்களது ஆயுதங்களை பறித்து சென்றுள்ளனர்.
கிடைத்த தகவல்படி வங்க தேச நாட்டவர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்பு படையினர் காவல் காத்து வந்த நிலையை நிறைய வங்க தேசத்தினர் வந்து தாக்கி தான ஆயுதங்களை பறித்திருக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு வீரர் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.