ஏடன் வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ள இந்திய கடற்படை
இந்தியாவினுடைய கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்க கல்ப் பகுதியில் இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்க பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனை காரணமாக இந்தியாவின் வர்த்தகம் தடைப் படக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மேஜர் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.இதில் 80 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்திவெளியிட்டிருந்தது.
இதன் காரணமாக கல்ப் பகுதியில் வரும் இந்திய வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம்,பாதுகாப்பு அமைச்சம் மற்றும் கப்பல் மற்றும் இயற்கை எரியாவு அமைச்சகம் இணைந்து இதற்கான பணிகளை செய்து வருகின்றன.