மாற்றம் பெறும் இந்திய இராணுவத்தின் வடிவம்: தியேட்டர் கமாண்டிற்குள் சிறிய தாக்கும் குழுக்களாக பிரிக்க திட்டம்
புதிய ஒருங்கிணைந்த தாக்கும் குழு ( new integrated battle groups (IBGs)) எனும் திட்டம் இராணுவத்தில் கொண்டுவரப்பட்டு அவை மேற்கு மற்றும் கிழக்கு போர்முனைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.படைகளை வேகமாக நகர்த்தி எதிரிகளை அடித்து திணறடித்து வெற்றி பெறும் நோக்கோடு இந்த திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது.தற்போது இராணுவத்தில் தியேட்டர் கமாண்ட்கள் உருவாக்கப்பட்டு அதனுள் இந்த புதிய சிறிய தாக்கும் குழுக்களை வைக்கலாம் என இராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
unified theatre commands-கள் உருவாக்கப்பட்டு அதில் உள்ள வீரர்களை சிறிய தாக்கும் குழுவாக பிரிக்கலாம என அவர் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.தியேட்டர் கமாண்ட் என்றால் ஒன்றுமல்ல , இராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் பகுதிகளாக பிரிக்கப்படும்.அதாவத ஒரு தியேட்டர் கமாண்டில் சிக்னல்,இன்டலிஜன்ஸ்,சர்விஸ்,சிறப்பு படை,கவச பிரிவு என தனியாகவே போரிடும் திறன் கொண்டவையாக இருக்கும்.போர் என்று வரும் போது தனிதனியாக ஒவ்வொரு பிரிவாக எல்லைக்கு நகர்த்துவதற்கு பதில் இந்த ஒரு தியேட்டர் கமாண்ட்டே உடனடியாக களத்தில் இறங்கி வேகமாக இயங்கலாம்..மற்ற படைகள் வர காத்திருக்க அவசியமல்ல..மேலும் இந்த தியேட்டர் கமாண்டுகளில சிறிய அளவிலான சக்திமிக்க தாக்கும் குழுக்களை இடம்பெற செய்யலாம் என்பதே தளபதியின் கருத்தாக உள்ளது.
இந்த ஒருங்கிணைந்த தாக்கும் குழு சிறிய இராணுவம் போல தான்.அது இயங்க மற்ற எதையும் சார்ந்திருக்க தேவையில்லை.இன்பான்ட்ரி,டேங்க் பிரிவு,ஆர்டில்லரி,வான் பாதுகாப்பு ,சிக்னல்,என்ஜினியர் மற்றும் மற்ற சப்போர்ட் பிரிவுகள் என ஒரு குழுவில் 5000 வீரர்கள் இருப்பர்.13 லட்சம் பலம் கொண்ட இந்த மொத்த இராணுவத்தையும் அதி சக்திமிக்க தாக்கும் படையாக பிரித்து மாற்றும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன.
தியேட்டர் கமாண்டுகளுக்கு இந்த சிறிய தாக்கும் போர் குழுக்கள் சிறப்பானதாக அமையும்.இதன் மூலம் நிறைய குழுக்கள் உருவாக்கி எதிரிகளோடு மிக சக்திமிக்க போர் ஒன்றை நடத்தலாம்.அதாவது பதிலடியே பயங்கரமாக இருக்கும்.ஆனால்
Corps-sized formations உருவாக்க இன்னும் காலதாமதம் ஆகலாம் என தளபதி நரவனே கூறியுள்ளார். தற்போது இராணுவத்தில் 40,000 முதல் 60,000 troops என்ற அளவில் 14 கார்ப்ஸ் பிரிவுகள் உள்ளன.
அரசு அனுமதி அளித்தவுடன் ஒருங்கிணைந்த தாக்கும் குழு வடிவம் குறித்த கடைசி உறுதியான முடிவு எடுக்கப்படும்.இதற்கு ஒன்று முதல் ஒன்றறை வருடம் ஆகலாம் என தளபதி கூறியுள்ளார்.
பாக்கிற்கென்றே 9 கார்ப்சின் கீழ் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தாக்கும் குழு செயல்பாட்டை இராணுவம் சோதனை செய்துள்ளது.
அதன் பிறகு “Him Vijay” என்ற பெயரில் 17 கார்ப்சின் கீழ் அருணாச்சலில் ஒருங்கிணைந்த தாக்கும் குழுவை சோதனை செய்தது.அவற்றின் முடிவுகள் உத்வேகம் அளிக்க கூடியனவாக தான் உள்ளன.
இவற்றிற்கு முதல் பணியாக 9,17 மற்றும் 33 கார்ப்ஸ் படைகளில் இருந்து எட்டு முதல் பத்து தாக்கும் குழுக்கள் உருவாக்கப்படும் என தளபதி கூறியுள்ளார்.வரும் மூன்று முதல் நான்கு வருடங்கள் இந்த புதிய போர்க்குழுக்கள் சோதனை செய்யப்பட்டு களத்தில் அவை சிறந்து செயல்படுமா என்பது குறித்து சோதனை செய்யப்படும் என தளபதி கூறியுள்ளார்.
ஆனால் பாக்கை குறிவைத்து உருவாக்கப்படும் குழுக்கள் கனரக டேங்குகள் மற்றும் கனரக ஆர்டில்லரிகளுடன் உருவாக்கப்படும்.அதே நேரம் சீனாவுக்காக உருவாக்கப்படும் குழுக்கள் மலையக தாக்கும் தளவாடங்கள் மற்றும் வீரர்களுடன் உருவாக்கப்படும்.நில அமைப்பு காரணமாக இது போல உருவாக்கப்பட உள்ளது.