தெரியாமல் சுட்டு விட்டோம்: உக்ரேன் விமானம் சுடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈரான்
உக்ரேன் விமானத்தை தாங்கள் தான் தெரியாமல் சுட்டு விட்டோம் என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
தனது தவறை தற்போது ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.இதற்கு முன் என்ஜின் பிரச்சனை காரணமாக தான் உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் ஈரான் கூறிவந்தது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவித் சாரிப் கூறுகையில் எந்த உள்நோக்கமும் இன்றி தவறுதலாக விமானம் சுடப்பட்டதாக தெரிவித்தார்.இது மனித தவறு எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கு மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.
இது சோக தினம்.அமெரிக்காவின் அசுரத்தனம் காரணமாக மனித தவறின் மூலம் இந்த சம்பவம் நடந்துவிட்டதாக மன்னிப்பு கூறியுள்ளார்.
83 ஈரானியர்கள், 11 உக்ரேனியர்கள், 63 கனடியர்கள், 10 ஸ்வீடிஷ் மற்றும் 4 ஆப்கானியர்கள், 3 ஜெர்மானியர்கள் , 3 பிரிட்டிஷார் என 170க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.