பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்; டெல்லியில் நிலைநிறுத்த அரசின் அனுமதி கேட்கும் டிஆர்டிஓ

பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்; டெல்லியில் நிலைநிறுத்த அரசின் அனுமதி கேட்கும் டிஆர்டிஓ

இந்தியா சொந்தமாகவே  Ballistic Missile Defence (BMD) programme திட்டத்தின் கீழ் எதிரியின் பலிஸ்டிக் ஏவுகணையை வானிலேயே அழிக்கும் அமைப்பை மேம்படுத்தி வந்தது.தற்போது அந்த திட்டம் முடிவடைந்துள்ளது.

தற்போது இந்த அமைப்பை டெல்லியில் நிலைநிறுத்த விமானப்படை மற்றும்  Defence Research and Development Organisation (DRDO) அரசின் அனுமதியை வேண்டியுள்ளது.

இந்த BMD மற்றும் இரஷ்யாவின்  S-400 Triumf air defence system இணைந்து நாட்டை எதிரியின் அனைத்து விதமான ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்கும்.

“ BMD programme வெற்றியடைந்துள்ளது.மேம்பாடு தொடர்பான அனைத்து சோதனைகளும் வெற்றியடைந்துள்ளது.நாட்டின் வான் பகுதியை பாதுகாப்பு விமானப்படையின் பணியாகும்.தற்போது இந்த பலிஸ்டிக் எதிர்ப்பு அமைப்பை தலைநகரில் நிறுவ அனுமதி கேட்டுள்ளோம்” என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சேட்டிலைட் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி பரிசோதித்து வெற்றி பெற்றது இந்த திட்டத்தின் மாபெரும் உந்துதல் ஆகும்.

சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் டொங்பெக் ஏவுகணைகள் பூமியின் அட்மோஸ்பியருக்குள் வரும் முன் தொலைதூர வானிலேயே பயணிக்கும்.இவற்றை வானிலேயே அழிக்க செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையான ஏசாட் அவசியம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.