பிரசவ வலியில் துடித்த பெண்ணை காப்பாற்றிய இந்திய இராணுவம்; நெகிழ்ச்சி சம்பவம்
வீரம் மற்றும் தேர்ந்த செயலுக்கு என்றுமே பெயர்பெற்றது நமது இராணுவம்.எதிரிகளை முன்னனி எல்லைப் பகுதியில் சந்திக்கும் அதே நேரம் நாட்டிற்குள்ளும் மனிதாபிமான உதவிகள் செய்ய தயங்குவதில்லை.
எப்போது இராணுவத்தின் உதவி மக்களுக்கு தேவைப்பட்டாலும் அங்கு இராணுவம் தோன்றி தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.
சமீமா மற்றும் அவரது குழந்தை நலமுடன் வாழ பிரார்த்த்கிறேன் என பிரதமர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நான்கு மணி நேரம் கடும் குளிரில் அந்த பெண்ணை கால்நடையாக சுமந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் நமது வீரர்கள்.
கடந்த ஜனவரி 14 அன்று தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.பாராமுல்லாவின் அப்லோனா பகுதியில் பணிசெய்து கொண்டிருந்த வீரர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.டர்ட்புரா கிராமத்தில் இருந்து வந்த அந்த அழைப்பில், ஒரு பெண் பிரசவ வலியில் துடிப்பதாகவும் உங்கள் உதவி தேவை என்றும் தகவல் கிடைக்க இராணுவம் மறுமுறை யோசிக்காமல் களத்தில் இறங்கியது…உண்மை தான் கிராமத்து மக்களுக்கு யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்றும் யார் உதவுவார்கள் என்றும் நன்கு தெரியும்.இராணுவ தளத்தல் இருந்து அந்த கிராமம் 4கிமீ.கடும் பனி.ஓடுவதோ வாகனம் பயன்படுத்துவதோ முடியாத காரியம்.
லோக்கல் கம்பெனி கமாண்டர் தலைமையில் ஒரு ரோந்து குழு மற்றும் ஒரு இராணுவ டாக்டர் அனைவரும் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கிளம்பினர்.தளத்தின் வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது திட்டம்.சமீமா என்ற அந்த பெண்ணை மீட்டு தளத்திற்கு கால் நடையாக பயணம் செய்யும் வேளையில் வானூர்தி தளத்தின் மீது படர்ந்திருந்த ஐந்து அடி பனியை சுத்தம் செய்ய மற்றொரு வீரர்கள் குழு களமிறங்கியது.மற்றொரு குழு அப்லோனாவில் இருந்து பாரமுல்லா சாலையில் இருந்த பனியை அகற்றும் பணியை தொடங்கியது.
ஆனால் அப்லோனாவில் சமீமா அவர்கள் நலமுடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்திய இராணுவவீரர்கள் ஆம்புலன்சை பயன்படுத்தி பாரமுல்லா மருத்துவனைக்கு மிக விரைவாக கொண்டு சேர்த்தனர்.அங்கு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து தற்போது தாயும் சேயும் நலமோடு உள்ளனர்.