பாக் போர்விமானம் விபத்து; இரு வீரர்கள் உயிரிழப்பு
பாக் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் பஞ்சாப் ( பாகிஸ்தான்) பகுதியில் விபத்துக்குள்ளானது.இதில் விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பாக்கின் PAF FT-7 விமானம் லாகூரில் இருந்து 300கிமீ தூரத்தில் உள்ள மியான்வலி என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது என பாக் விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இரு விமானிகளான Squadron Leader Haris bin Khalid மற்றும் Flying Officer Ibaad ur Rehman ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
விபத்து குறித்த காரணங்கள் அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த மியான்வலி பகுதி தான் பாக் பிரதமர் இம்ரானின் சொந்த ஊராகும்.
விபத்துமீட்பு குழு சம்பவ இடத்திற்கு சென்று வீரர்களின் உடல்களை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.