நான்காவது கார்வெட் போர்க்கப்பல் விரைவில் கடற்படையில் சேர்ப்பு

நான்காவது கார்வெட் போர்க்கப்பல் விரைவில் கடற்படையில் சேர்ப்பு

நான்காவது மற்றும் கடைசி கமோர்த்தா ரக நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான ஐஎன்எஸ் கவரத்தி கப்பலை விரைவில் கடற்படைக்கு டெலிவரி செய்ய உள்ளது கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம.

கடற்படைக்காக கட்டப்பட்டு வந்த நான்கு கார்வெட் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான கமார்ட்டா ரக கப்பல்களில் கடைசி கப்பல் தான் இந்த கவரத்தி போர்க்கப்பல்.பி-28 திட்டத்தின் கீழ்  GRSE எனப்படும் கார்டன் ரீச் கபபல் கட்டும் தளம் தான் கட்டிவந்தது.

கப்பலின் அனைத்து வித சோதனைகளும் தற்போது முடிவடைந்துள்ளது.இந்த மாத இறுதியில் கப்பல் கடற்படை வசம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3300 டன்கள் எடையுடைய இந்த கப்பல் carbon composite superstructure ஆல் கட்டப்பட்டுள்ளது.

 carbon composite superstructure கப்பலுக்கு குறைந்த எடை மற்றும் நிலைத்தன்மை அளிக்கும்.நல்ல maneuverability மற்றும் கப்பல் வேகமாக இயங்க  அனுமதிக்கும்.

அராபியன் கடற்பகுதியில் உள்ள லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள தீவுகளின் பெயர்கள் தான் இந்த நான்கு கப்பல்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.