காஷ்மீரில் கடும் சண்டை; ஒரு வீரர் வீரமரணம்

காஷ்மீரில் கடும் சண்டை; ஒரு வீரர் வீரமரணம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் பகுதியில் உள்ள க்ரியு காட்டுப்பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த சண்டையில் 55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைப் பிரிவை சேர்ந்த ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மேலும் காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு படையான SOG Commando படைப் பிரிவைச் சேர்ந்த ஷாபிஸ் அகமது என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

மேலும் இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆபரேசனை 50வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,185 CRPF மற்றும் காஷ்மீர் காவல்துறை வீரர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.