ராயல் ஓமன் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

  • ராயல் ஓமன் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

இந்திய மற்றும் ஓமன் கடற்படைகள் இணைந்து 12வது முறையாக இணைந்த போர்பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

ஓமன் கடற்படை சார்பில் RNOV AL Rasikh மற்றும் RNOV Khassab ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்கும் நிலையில் இந்தியா சார்பில் INS Beas மற்றும் Sukanya Class OPV கலந்து கொள்ளும்.

இரு கடற்படைகளும் கோவா கடற்பகுதியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகள் பல ஆண்டுகளாக அதிகரித்தே வந்துள்ளன.

ஓமனில் ஒரு கண்கானிப்பு நிலையம் அமைக்க ஏற்கனவே இந்தியா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.அங்கிருந்து நமது கடற்படை அப்பகுதியில் உள்ள கடல் வழிகளை கண்கானித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.