ஈராக்-அமெரிக்கா முரண்பாடு ; துருப்புகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை- அமெரிக்கா

 ஈராக்-அமெரிக்கா முரண்பாடு ; துருப்புகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை- அமெரிக்கா

ஈராக்கில் இருந்து அமெரிக்கத்துருப்புகளை வெளியேற்றும் நிலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க டிபன்ஸ் செக்கரடரி மாராக் எஸ்பர் கூறியுள்ளார்.ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த பதிலை அளித்துள்ளார் மார்க் எஸ்பர்.

சுமார் 5000 அமெரிக்க வீரர்கள் தற்போது ஈராக்கில் உள்ளனர்.ஐஎஸ்-க்கு எதிரான சர்வதேச படையின் அங்கமாக அங்கு உள்ளது.அமெரிக்க துருப்புகளை ஈராக்கில் அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ஈராக் பராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் al-Quds force கமாண்டர் மேஜர் ஜெனரல் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பிறகு இதுபோன்றதொரு முடிவை ஈராக் அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஈராக்கின் ஹசெத் அல் சாபி பாராமிலிட்டரி  தலைவல் அபு மஹ்டி அல் முகான்டிஸ் அவர்களும் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதி குழுவை ஒழிப்பதில் தீர்க்கமாக இருப்பதாகவும் ஈராக்கில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என எஸ்பர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.