
விங் கமாண்டர் அபி அவர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் என்ன தான் செய்தார் ? வெளிவந்த ஆச்சரிய தகவல்கள்
வி/க அபி அவர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்காக அரசு வெளியிட்டிருந்த சிட்டேசனில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.அதில் அவரது வீரத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
எதிரிகளின் தொழில்நுட்ப மற்றும் எண்ணிக்கை பலம் அதிகமாக இருந்திருந்தும் Wing Commander Abhinandan Varthaman எதிரிகளின் தாக்கும் குழுவை வீரமுடன் எதிர்கொண்டார் எனவும் பாக்கின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் எனவும் வீர்சக்ராவிற்கான சிட்டேசன் தெரிவிக்கிறது.
அவரது aggressive manoeuvres எதிரிகளை குழப்பத்தில் ( tactical chaos ) ஆழ்த்தியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நமது மிராஜ் விமானங்கள் பாக்கினுள் நுழைந்து பாலக்கோட்டை தாக்கி வெளிவந்த பின் பிப் 27ம் நாள் பாக் தனது படைகளை கொண்டு பதிலடி நடத்த இந்தியா நோக்கி வந்தன.இதன் பின் தான் வானிலேயே இரு நாட்டு விமானங்களும் சண்டையிட்டன.
கடந்த ஆண்டு அபி அவர்களுக்கு வீர் சக்ரா அறிவிக்கப்பட்ட உடன் அதற்கான தகவல்கள் எதும் அரசு வெளியிடவில்லை.நமக்கு தெரிந்தது எல்லாம் அபி அவர்கள் ஒரு எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது தான்.
வீரசக்ரா மூன்றாவது உயரிய இராணுவ விருதாகும்.பரம்வீர்,மகாவீர் விருதுக்கு அடுத்து வருவது வீர் சக்ரா ஆகும்.
தனது விமானம் எதிரியின் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் தான் அவர் ஒரு பாக்-16ஐ சுட்டு வீழ்த்தியிருந்தார்.தனது விமானம் சுடப்பட்ட பிறகு விமானத்தை விட்டு வெளியேறுவதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை.எதிரியின் நிலப்பரப்பில் விழுந்து தான் வைத்திருந்த முக்கிய கோப்புகளை அழித்த பின் எதிரிகள் அவரை கைது செய்தனர் என்பது நாம் அறிந்ததே.60 மணி நேரத்திற்கு பிறகு இந்தியாவின் அழுத்தத்தால் பாக் வேறு வழி இல்லாமல் அபி அவர்களை ஒப்படைத்தது.
ஸ்ரீநகர் படைத் தளத்தில் மிக்-21 விமானத்தை இயக்கி வந்த அபி அவர்கள் எதிரி விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு பிரிவு கண்டவுடன் மற்ற விமானங்களுடன் ஐந்தே நிமிடத்தில் அனுப்பியது.
எதிரிகள் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்கை தாக்க வல்ல நவீன வான்-வான் ஏவுகணைகளும், வான்-தரை குண்டுகளுடன் இந்திய எல்லையை நெருங்கினர்.
தன்னுடைய விமானத்தில் இருந்த airborne intercept (AI) radar-ஐ பயன்படுத்தா குறைஉயர பகுதிகளை ஆராய்ந்த போது உயரத்தில் மட்டுமல்ல குறை உயரப் பகுதிகளில் பாக் படைகள் பறந்து வந்ததை பார்த்தார்.உடனே தனது சகாக்களை எச்சரித்து ஒருங்கிணைந்து எதிரிகளை விரட்ட தொடங்கினார்.
எதிரிகள் இந்த நேரத்தில் இந்திய இராணுவ நிலைகள் மீது குண்டு போட தொடங்கியிருந்தனர்.
உடனே aggressive maneuver செய்து எதிரிகளை திணறடித்து குழப்பமடையச் செய்ய எதிரி படைகள் பின்வாங்கின.
இப்படி பின்வாங்கிய ஒரு எப்-16 விமானத்தை அபி அவர்கள் வீழ்த்த மற்றொரு எப்-16 விமானம் அபி அவர்களின் மிக்கை தாக்கின.
அபி அவர்கள் தேர்ந்த திறன் மற்றும் வீரம் காரணமாக அவருக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.