குடியரசு தினத்தை முன்னிட்டு லெப் ஜென் தில்லான் அவர்களுக்கு விருது அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு லெப் ஜென் தில்லான் அவர்களுக்கு விருது அறிவிப்பு

சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல  KJS தில்லான் அவர்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது வழங்கப்பட உள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழித்தல் மற்றும் அமைதி பணிகளில் ஈடுபட்டமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“டைனி” என அன்போடு அழைக்கப்படும் லெப் ஜென் தில்லான் அவர்கள் இந்த விருதுக்கு ஆக தேர்வானவர்.

1983ல் இராஜபுதன ரைபிள்ஸ் படையில் இணைந்ததில் இருந்து தேச சேவையில் கடந்த 35 வருடமான தன்னை ஈடுபடுத்தி கொண்ட தேசாபிமானி ஆவார்.

இதற்குமுன் யுத்த சேவை விருது மற்றும் விஷிஷ்ட் சேவை விருது ஆகியவற்றை பெற்றவர்.

பல்வறேு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.காஷ்மீரில் உள்ள அம்மாக்களுக்கு தனது மகன்களை பயங்கரவாதத்தை விடுத்து தேசிய நீரோடையில் இணைய அறிவுரை கூறியவர்.

Leave a Reply

Your email address will not be published.