மூன்றே மாதங்களில் நான்கு தேஜஸ் விமானங்கள்; போர்க்கால வேகத்தில் பணி

மூன்றே மாதங்களில் நான்கு தேஜஸ் விமானங்கள்; போர்க்கால வேகத்தில் பணி

போர்க்கால வேகமாக  Hindustan Aeronautics Ltd (HAL) அடுத்த மூன்று மாதத்தில்  முதல் நான்கு Final Operational Clearance (FOC) வகை தேஜஸ் விமானங்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர் தயாரிப்பில்  SP-21 முதல் SP-24 என அடையாளமிடப்பட்ட நான்கு விமானத் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த தேஜஸ் விமானங்களை கொண்டு இரண்டாவது ஸ்குவாட்ரான் உருவாக்கும் பணி நடைபெற ஏதுவாக உள்ளது.

நமது சூலூரில் தான் இரண்டாம் ஸ்குவாட்ரான் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. SP-21 விமானத்தில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளை சோதனை செய்து வருகிறது ஹால் நிறுவனம்.அதன் பிறகு இந்த மாதத்திற்குள் அதன் முதல் பறப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 2019 இறுதியில் பறக்கும் என ஹால் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேன் என தாமதம் ஆகியுள்ளது.

இது தவில SP-22 மற்றும்  SP-23 ஆகிய விமானங்கள் equipping stage-ல் உள்ளதாகவும்   SP-24 விரைவில் equipping stage-க்கு இந்த மாத மத்தியில் நகர்த்தப்படும் எனவும் ஹால் கூறியுள்ளது.

மீதமுள்ள 12 விமானங்களும் மார்ச் 2021க்குள் தயாரிக்கப்படும்  என ஹால் கூறியுள்ளது.FOC standard வகையில் 16 தாக்கும் விமானங்களும் மற்றும் எட்டு பயிற்சி விமானங்களும் ஹால் தயாரித்து வழங்கும்.

இந்த  FOC block வகையில்  air-to-air refueling probe, Gsh-23 mm gun, pressure refueling with three drop tank configuration (725 and 8001200 liters), improved wing navigation lamp, in-flight wind mill relight என முக்கிய அம்சங்கள் இடம்பெறும்.

கிடைத்த தகவல் படி  Gp Capt Manish Tolani அவர்கள் இரண்டாம் தேஜஸ் ஸ்குவாட்ரனுக்கு கமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.அவர் தற்போது சூலூரில் உள்ள  No 45 Squadron Flying Daggers-ல் பணியாற்றி வருகிறார்.

தேஜஸ்,மிக் மற்றும் ஹாக் விமானங்களில் பறந்த அனுபவம் உள்ளவர்.

Leave a Reply

Your email address will not be published.