
மடகாஸ்கருக்கு விரையும் கடற்படை கப்பல்-மீட்பு பணி தீவிரம்
மடகாஸ்கர் நாடு கடந்த ஒரு வாரமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளன மற்றும் பல்வேறு மக்கள் இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல் காப்பாளராக இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.இதன் காரணமாக சீசெல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய கடற்படையின் ஐராவத் கப்பல் தற்போது உதவிப்பணிகளுக்காக மடகாஸ்கர் விரைந்துள்ளன.
இந்த கப்பல் வரும் 30 ஜனவரி 2020ல் மடகாஸ்கர் சென்றடையும்.இந்த கப்பலில் உயிர்காக்கும் மருந்துகள்,உணவுகள் மற்றும் துணிகள் என அவசர தேவைகளுக்கான பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களை மீட்க கப்பலில் உள்ள கப்பலில் உள்ள நான்கு பெரிய கப்பல்கள் மற்றும் இரு சிறிய கப்பல்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
‘Security and Growth for all in the Region (SAGAR)’ என்னும் நோக்கில் இந்த உதவிகளை கடற்படை செய்து வருகிறது.