புது வடிவம் பெறும் தேஜஸ்-இரு என்ஜின் பெறுகிறது

புது வடிவம் பெறும் தேஜஸ்-இரு என்ஜின் பெறுகிறது

இன்னும் 12 வருட காலத்திற்குள் இரஷ்ய தயாரிப்பு மிக்-12கே ரக விமானங்கள் படையில் இருந்து வெளியேற உள்ளன.இந்திய கடற்படைக்காக தேஜசின் ஒற்றை என்ஜின் வகை ஒன்றை கடற்படைக்காவும் மேம்படுத்தி வருகிறது ஹால் நிறுவனம்.

ஆனால் ஒற்றை என்ஜின் மீது அதிக ஆர்வம் காட்டாத கடற்படை இரட்டை என்ஜின் மீது தான் அதிக ஆர்வம் காட்டுகிறது.

இதற்காக ஹால் நிறுவனம்  Twin Engine Deck Based Fighter (TEDBF) எனப்படும் இரட்டை என்ஜின் கொண்ட விமானம் குறித்த படிப்பினையில் இறங்கியுள்ளது.ஏரோநாட்டிகல் வடிவமைப்பு மற்றும் இதர பணிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.ஆனால் அரசு இதற்கு பண உதவி செய்தால் தான் மேற்கொண்டு திட்டத்தை நகர்த்த முடியும்.

இதை தவிர விமானப்படைக்காக  Omni Role Combat Aircraft (ORCA) குறித்த படிப்பினையையும் ஹால் மேற்கொண்டு வருகிறது.கடற்படை வகையை விஞ ஒரு டன் எடை குறைவானதாக இந்த ஓர்கா வகை இருக்கும் என கூறப்படுகிறது.

வடிவமைப்பு ,முன்மாதிரி மேம்பாடு ஆகியவற்றிற்காக 12780 கோடிகள் தேவைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.கடற்படைக்கா மேம்படுத்தப்படும் இரு என்ஜின் விமானம் ஒன்று  Rs. 538 crores என்ற அளவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.