
பாக்கின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள்
ஜம்முவிற்கு அருகே உள்ள சர்வதேச இந்தியா-பாக் எல்லைக் கோடருகே வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
திங்கள் அன்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவிற்கு அருகே உள்ள ஆர்னியா பெல்ட் அருகே உள்ள முன்னனி எல்லை நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆளில்லா விமானத்தால் காமிரா எதுவும் இல்லை என
IG BSF, Jammu Frontier, N S Jamwal அவர்கள் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.