முப்படை தளபதி ராவத்தின் முதல் அதிரடி திட்டம்-வான் பாதுகாப்பு கட்டளையகம் என்ற புது பிரிவை தொடங்க பரிந்துரை

முப்படை தளபதி ராவத்தின் முதல் அதிரடி திட்டம்-வான் பாதுகாப்பு கட்டளையகம் என்ற புது பிரிவை தொடங்க பரிந்துரை

இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள chief of defence staff General Bipin Rawat அவர்கள் புதிய வான் கட்டளையகத்தை உருவாக்க பரிந்துரை செய்ய தயாராகுமாறு Integrated Defence Staff (IDS)-ன் முக்கிய உயரதிகாரிகளை கூறியுள்ளார்.

இன்னும் ஆறு மாதத்திற்குள் அதாவது ஜீன் 30ல் இந்த திட்டம் சமர்பிக்கப்படும்.இந்த கட்டளையகத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் முக்கிய இராணுவ சொத்துக்களை வான்வழி ஆபத்துகளில் இருந்து காப்பதுதான்.

முப்படைகளின் வான் பாதுகாப்பு தளவாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சொத்துக்கள் பாதுகாக்க இந்த கட்டளையகம் வழிசெய்யும்.

முப்படைகையும் ஒருங்கிணப்பதே  CDS அவர்களின் பணியாக இருக்கும்.மிக முக்கிய பணி படைகளை ஒருங்கிணைத்து  joint/theatre command உருவாக்குவதே.இதன் மூலம் எதிர்கால பலபரிமாண போர்களை எதிர்கொள்ள படைகள் பழக்கப்படுத்தப்படும்.கடற்படை மற்றும் இராணுவம் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கினாலும் விமானப்படை சில கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளது.

முப்படைகளுடன் கடலோர காவல்படையும் இணைந்து ஒருங்கிணைத்து பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.

சீனாவும் தியேட்டர் கமாண்ட் என்ற அமைப்பில் தான் தனது படைகளை கட்டமைத்துள்ளது.இந்தியாவிற்கென்றே தனி தியேட்டர் கமாண்ட் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.