Breaking News

ஏசாட் முதல் தனுஷ் வரை ; இந்த வருட குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ள புதிய தளவாடங்கள்

ஏசாட் முதல் தனுஷ் வரை ; இந்த வருட குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ள புதிய தளவாடங்கள்

பல வருடங்கள் நமது குடியரசு தின விழாவில் அணு ஆயுதங்கள் காண்பிப்பதை நிறுத்திவிட்டது.அதன் பிறகு தற்போது மிக முக்கிய வகையில் இந்தியாவின் திறமையை உலகுக்கு காண்பிக்கும் பொருட்டு செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தக்கூடிய ஏசாட் ஏவுகணையை காண்பிக்க உள்ளது.

கடந்த வருட மார்ச்சில் ஏசாட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.செயற்கை கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட திறன் கொண்ட நான்கு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

அமெரிக்கா,சீனா மற்றும் இரஷ்யா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பெற்றுள்ளன.

இந்த ஏசாட் தவிர இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள தனுஷ் ஆர்டில்லரியும் முதன் முறையாக அணிவகுப்பில் இடம்பெற உள்ளது.

38கிமீ உள்ள இலக்குகளை தாக்க வல்லது தனுஷ் ஆர்டில்லரி.தனுஷ் தவிர கே-9 வஜ்ராவும் கலந்து கொள்ள உள்ளது. short-span bridging system மற்றும் Sarvatra Bridge system ஆகியவையும் கலந்துகொள்ள உள்ளது.

இந்த வருடம் முப்படை தளபதிகள்,சிடிஎஸ் மற்றும் பிரதமர் ஆகியோர் முதல் முறையான தேசிய போர் நினைவகம் சென்று அங்கு வீரவணக்கம் செலுத்துவர்..இதற்கு முன்பு வரை அமர் ஜவான் ஜோதியில் தான் வீரவணக்கம் செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.